இன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் சிம்பாவே அணி 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கான 280 ஓட்டங்களை 45.2 ஓவர்களில் பெற்றுக்கொண்டது. 6.19 எனும் ஓட்ட விகிதத்தில் இந்த வெற்றியிலக்கை அடைந்துள்ளமை சிறப்பான அம்சமாகும்.
இதன் மூலம் இடம்பெற்ற இரு பயிற்சி போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது.
முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் திமுத் கருணாரத்ன மற்றும் ஜிவன் மென்டிஸ் ஆகியோர் அரைச்சதம் பெற்றதுடன் டில்சான் இன்றைய போட்டியில் துடுப்பெடுத்தாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி மஸக்ட்ஸாவின் ஆட்டமிழக்காத 117 ஓட்டங்களின் உதவியுடன் இலகுவாக வெற்றி பெற்றது. மேலும் டெய்லர் மற்றும் வில்லியம்ஸ் அரைச்சதம் பெற்றனர்.
முன்னதாக நியூசிலாந்து அணியுடனான போட்டி மழை கைவிடப்பட்ட போதிலும் சிம்பாவே அணி சிறப்பாகப் பந்து வீசி நியூசிலாந்து அணியை 30.1ஓவர்களில் 157/7 எனும் நிலைக்கு மட்டுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது டேவ் வட்மோரே இந்த அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.