Language :     Englishதமிழ்

பண்டாவெளி பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி

மன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள  பண்டாவெளி பாடசாலையின் அதிபர் ஹபீப் முஹ்பு உவைஸ் தலைமையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நேற்று மாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சர் றிஷாட் பதியுதின் கலந்து சிறப்பித்தார்.

பாடசாலை அதிபர் தெரிவிக்கையில்  கடந்த காலங்களில் அமைச்சர் எங்கள் பாடசாலைக்கு அதிகமான உதவிகளை செய்து உள்ளார் என்றும் இன்னும் எங்கள் பாடசாலை பல தேவைகளை உடைய பாடசாலையாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து றிஷாட் பதியுதின் தெரிவிக்கையில் பண்டாரவெளி பாடசாலைக்கு அவசர தேவையாக இருக்கின்ற ஆசிரியர் விடுதியினையும், மாணவர்களின் அறிவு திறனை அதிகரிக்க விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்றையும் வெகுவிரைவில் அமைத்து தருவதாக தெரிவித்தார்.

இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசளிப்புகளும் வழங்கி வைத்து நிகழ்வு நிறைவடைந்தது.

You may also like ...

ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை சுவீகரித்தார் பென் ஸ்டோக்ஸ்!

BBC வருடாந்த விருது வழங்கல் விழாவில் ஆண்டின் அதிசி

தெற்காசிய விளையாட்டு விழா நிறைவு: இலங்கைக்கு 250 பதக்கங்கள்

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 172 தங்கப்பத

புதிய தொகுப்புகள்