உலகக் கிண்ண வாய்ப்பை தவறவிட்ட தம்மிக்க பிரசாத்

2015 உலகக் கிண்ணப் போட்டிகளில் தம்மிக்க பிரசாத் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பயிற்சியின் போது அவரது இடது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இவருக்கான மாற்றீடு விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் இம்மாதம் 14ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து

உலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

நடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள

புதிய தொகுப்புகள்