இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 169 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இலங்கை - இந்தியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தவான் மற்றும் ரெஹானே ஆகியோர் மிகச் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு வலுவான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
ஷகீர் தவான் 113 ஓட்டங்களையும் ரெஹானே 111 ஓட்டங்களையும் விளாச 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 363 ஓட்டங்களைக் குவித்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 364 என்ற வெற்றி இலக்கைத் துரத்தி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணி, 39.2 ஓவர்களில் 194 ஓட்டங்களை ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்த வேளை சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்படி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 169 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.