19 பந்துகளில் 45 ஓட்டங்கள்; கிரிக்கெட்டிலும் சாதித்த உசைன் போல்ட்

பெங்களூர் சின்னச்சாமி அரங்கில் நடைபெற்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள சாம்பியன் உசைன் போல்ட், யுவராஜ் சிங் தலைமையிலான அணியை அபாரமாக வீழ்த்தினார்.

உசைன் போல்ட் கிரிக்கெட்டிலும் தனது அட்டகாசத் திறமையை நேற்று நிரூபித்தார். அபாரமான ஐந்து சிக்ஸர்களைப் பறக்க விட்டு அரங்கை அதிர வைத்தார் போல்ட்.

போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தவர். அவர் 9.58 விநாடிகள் என்ற சாதனையை வைத்துள்ளார். இதைக் குறிக்கும் வகையில் அவர் அணிந்திருந்த டி சேர்ட்டில் பின்னால் 9.58 என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தது.

போல்ட் கிரிக்கெட்டிலும் தான் ஒரு மன்னன் என்பதை நிரூபித்தார். யுவராஜ் அணியின் பந்து வீச்சினை சிறப்பாக எதிர்கொண்ட அவர் 19 பந்துகளில் 45 ஓட்டங்களை குவித்தார்.

போல்ட் அணியில் ஹர்பஜன் சிங்கும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டி முடிந்ததும் 100 மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது இதில் போல்ட்டும், யுவராஜ் சிங்கும் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட்டில் போல்ட் வெற்றிபெற்ற போதிலும் ஓட்டப் போட்டியில் யுவராஜ் சிங் வென்றார்.

 

You may also like ...

அடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க வரலாற்று சாதனை!

சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் அடுத்தடுத

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ

புதிய தொகுப்புகள்