இந்தியாவுக்கு வெற்றி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்களினால் இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மூயேன் அலி 67 ஓட்டங்களையும், ஜோ ரூட் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜிங்கையா ரெஹானே 106 ஓட்டங்களையும், ஷிகார் தவான் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும் பெற்றனர். முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் 183 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
 
போட்டியின் நாயகனகா அஜிங்கையா ரெஹானே தெரிவு செய்யப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் அடங்கிய தொடரில் 3 இற்கு 0 என இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டி எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது.

You may also like ...

World Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத

வெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதர

புதிய தொகுப்புகள்