ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.