அடுத்த மாதம் பிரேசிலில் உலகக்கிண்ண கால்பந்து தொடர் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் பயன்படுத்தப்படும் பந்துகளை தயாரிக்க, சீனாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஓப்பந்தம் செய்யப்பட்டது.
இருப்பினும் அந்த நிறுவனங்களால் பந்துகளை தேவையான அளவு தயாரித்து வழங்க முடியவில்லை.
அதனை அடுத்து, இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் சியால் கோட் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
பிரெஞ்ச் லீக், சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில், பங்கேற்கும் ஜேர்மனியின் பண்டஸ்லிகா அணிக்கு, ஏற்கனவே, இந்த நிறுவனம் பந்துகளை தயாரித்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 கோடி எண்ணிக்கையிலான கால்பந்துகளை ஏற்றுமதி செய்கிறது.
இது உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் ஆகும் என குறிப்பிடப்படுள்ளது.