அனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று விளங்கும் இந்தியன் பிரிமியர் லீக் தொடர், இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஏழாவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் அபுதாபியில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 ஆம் திகதி முதல் இந்திய மக்களவைத் தேர்தல் நடைபெறுவதனால் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை, 20 போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளன.
ஏனைய போட்டிகள் மே மாதம் 2 ஆம் திகதி முதல் இந்தியாவில் நடத்துவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரோயல் செலென்ஜர்ஸ், டெக்கன் சார்ஜஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறை கிண்ணத்தை சுவீகரித்துள்ளன. எனினும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மாத்திரமே இரண்டு தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் சுரேஷ் ரெய்னா முதலிடம் வகிக்கின்ற அதேவேளை அதிக விக்கட்டுக்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க முதலிடம் வகிக்கின்றார் எனபது நம் அனைவருக்கும் பெருமையான செய்தி.
இதுவரை ஐ.பி.எல் தொடர்களில் அதிக போட்டிகளுக்கு தலைமை தாங்கிய அணித்தலைவராக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி திகழ்கின்றார்.