ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி சாதிக்கும்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் இரண்டாவது தடவையாக களம் இறங்குகிறது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, அது குறித்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்கள் சந்திப்பின் போது ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி இவ்வாறு கூறினார், ‘ஐ.பி.எல்.-லில் கடந்த ஆண்டில் முதல் முறையாக ஆடினோம். முதல் பயணமே

எங்களுக்கு சிறப்பாக (பிளே-ஆப் சுற்று வரை முன்னேற்றம்) அமைந்தது. எங்களது அணியில் அனுபவம், இளமை என்று சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மீண்டும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

ரைசர்ஸ் அணியின் ஆலோசகர் ஸ்ரீகாந்த் கூறும் போது, ‘இந்த தொடருக்கு எங்களது அணி நன்றாக தயாராகி இருக்கிறது. கடந்த சீசனில் விளையாடிய இஷாந்த் ஷர்மா, ஷிகர் தவான், கரண் ஷர்மா, அமித் மிஸ்ரா, டேரன் சேமி, ஸ்டெயின் போன்ற வீரர்கள் அப்படியே தொடருவது அணிக்கு பலம் சேர்க்கும் முக்கியமான அம்சமாகும்’ என்றார்.
மேலும் ஐதராபாத் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கூறுகையில், ‘காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதன் பிறகு அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. மறுபடியும் அணிக்கு திரும்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அதற்கு இந்த ஐ.பி.எல். போட்டியை முழுமையாக பயன்படுத்திக் கொள்வேன்’ என்றார்.

மற்றொரு ஐதராபாத் வீரர் இஷாந்த் ஷர்மா கூறும் போது, ‘இந்திய ஆடுகளங்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளங்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் இந்தியாவில் ஆடுகிறோமோ அல்லது அரபு எமிரேட்சில் விளையாடுகிறோமோ என்பது ஒரு பிரச்சினையே கிடையாது. பொதுவாக ஆசிய ஆடுகளங்கள் அனைத்தும் ஒரே தன்மை கொண்டவை தான். ஆனால் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. களத்தில் வியூகங்களை சரியாக செயல்படுத்துவது தான் முக்கியம்’ என்றார்.

You may also like ...

மும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு!

IPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி

IPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற

புதிய தொகுப்புகள்