புதிய ஐ.சி.சி தரப்படுத்தல் வெளியாகியது

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் முடிவடைந்துள்ளதையடுத்தே இந்தத் தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தலில் துடுப்பாட்டத்தில் முதலிடத்தை விராத் கோலி பெற்றுள்ளார்.

இதுவரை காலமும் முதலிடத்தில் காணப்பட்ட ஹசிம் அம்லாவைப் பின்தள்ளியே அவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அத்தோடு, இத்தொடரில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய ஜோர்ஜ் பெய்லி 6 இடங்கள் முன்னேறி 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
 
பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் சயீட் அஜ்மல் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதுவரை காலமும் 3ஆவது இடத்தில் காணப்பட்ட அவர் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பெற்றார்.

முதலிடத்தில் காணப்பட்ட சுனில் நரைன் ஓர் இடம் பின்தங்கியுள்ளதோடு, முதலிடத்தில் இணைந்து காணப்பட்ட ரவீந்திர ஜடேஜா 2 இடங்கள் பின்தங்கி 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
 
சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் மொஹமட் ஹபீஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர் ஷகிப் அல் ஹசனை முந்தியே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

You may also like ...

இனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்

இணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை

புதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்!

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர

புதிய தொகுப்புகள்