இந்தியா வீரர் ஜடேஜாவுக்கு அபராதம்

பெங்களூருவில் இந்தியாவின் விளையாட்டு உணர்வு பெரிதும் சேதமடைந்துள்ளது. ஷிகர் தவான் காயமடைந்த வாட்சன் நொண்டுவது போல் நொண்டிக்காட்டி அநாகரிகமாக நடந்துகொள்ள வாட்சன் அவுட் ஆகிச் சென்றபோது அசிங்கமாக பேசியதாக ரவீந்திர ஜடேஜாவுக்கு அவரது போட்டி சம்பளத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டது.

22 பந்துகளில் 49 ரன்களை வெளுத்துக் கட்டிய வாட்சன் ஜடேஜா பந்தில் ஷாட் தேர்ட்மேன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

உற்சாகமடைந்த ஜடேஜா ஷேன் வாட்சனை நோக்கி சில செய்கைகளை செய்ததோடு சில வார்த்தைகளையும் உதிர்த்தார்.

இது நிச்சயம் அவமரியாதையான வார்த்தை என்று நடுவர் கண்டிக்க மன்னிப்பு கேட்டார் ஜடேஜா.

இதோடு மட்டுமல்லாது ஜேம்ஸ் வாக்னர் அதிரடி சத இன்னிங்சை ஆட, கடுப்பான வீரத் கோலி அவருடன் வெறுப்பு வார்த்தைகளை பகிர்ந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தவான் கேலி செய்தபோதும் ஜடேஜாவின் ஓவர் ரியாக்ஷனின் போதும் கேப்டன் தோனி தலையிட்டு இந்திய வீரர்களின் அடக்கத்தை நினைவு படுத்தி எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

உலகின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ஜோகோவிச்!

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்த

இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது!

இலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர

புதிய தொகுப்புகள்