வங்கதேசத்திடம் தொடரை இழந்த நியூசீலாந்து

நேற்று பகலிரவு ஆட்டமாக மிர்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் நியூசீலாந்தை வங்கதேசம் 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏற்கனவே ரூபல் ஹுசைஇனின் அபாரமான 24வது ஓவர் ஹேட்ரிக்கினால் முதல் ஒருநாள் போட்டியை வங்கதேசம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று வங்கதேசம் 247 ரன்கள் எடுக்க நியூசீலாந்து 207 ரன்களுக்கு சுருண்டது. இத்தனைக்கும் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம் இருக்கிறார், அவர்தான் அணியின் கேப்டன் வேறு

இலக்கை துரத்திய வங்கதேசம், துவக்க வீரர் ருதர்போர்டின் விக்கெட்டை மோர்டசாவிடம் பவுல்டு முறையில் இழந்தது. பிறகு ஆன்டன் டேவிச் மற்றொரு ஆஃப் ஸ்பின்னர் சோஹாக் காஜியிடம் அவரது பந்து வீச்சிலேயே கேட்ச் கொடுத்து அவுட்!

கிராண்ட் எலியட் அப்துர் ரசாக் பந்தை நேராக காலில் வாங்கி எல்.பி.ஆனார். பிறகு ராஸ் டெய்லர் 45 ரன்களையும் கோரி ஆண்டர்சன் 37 ரன்கள் எடுத்து சற்றே நம்பிக்கை அளித்தனர். ஆனால் ஆண்டர்சன், பிரெண்டன் மெக்கல்லம், லாதம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசீலாந்து தடுமாறியது. டெய்லர் 45 ரன்னில் 40வது ஓவரில் வெளியேறினார். 157/8.

10 ஓவர்களில் 90 ரன்கள் எடுக்கவேண்டும். நேதன் மெக்கல்லம் (25), கைல் மில்ஸ் (27) ஆகியோர் போராடி பார்த்தனர். முடியவில்லை. நியூசீலாந்து பரிதாபமாக தொடரை இழந்தது.

வங்கதேச அணியில் மோர்டசா, காஜி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முன்னதாக வங்கதேச அணியில் அதிரடி வீரர் தமீம் இக்பால் அதிகபட்சமாக 58 ரன்களை எடுக்க, மொமினுல் ஹக், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தலா 31 ரன்கள் எடுத்தனர்.

You may also like ...

இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது

இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய

புதிய தொகுப்புகள்