350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நேற்று இடம்பெற்ற 6 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் போட்டித் தொடரை தற்போதைக்கு 2-2 என சமநிலைப் படுத்தியுள்ளது.

இதனால் இறுதியும், 7 ஆவதுமான போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இறுதிப் போட்டிக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

நேற்றய போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 350 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷேர்ன் வட்சன் 102 ஓட்டங்களையும், பெய்லி 156 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் ஜடேஜா, அஷ்வின் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 49.3 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

ரோஹித் ஷர்மா 79 ஓட்டங்களையும் ஷேகர் டவான் 100 ஓட்டங்களையும், விராத் கோலி ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும் எடுத்தனர். விராத் கோலி தனது 11 சதத்தை பூர்த்தி செய்தார். 350 அல்லது அதற்கு அதிகமான ஓட்டங்களை இரு தடவை துரத்தி அடித்த முதலாவது அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

You may also like ...

இந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ

இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது!

இலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர

புதிய தொகுப்புகள்