×

Error

There was a problem loading image untitled-270x170.jpg

கிரிக்கெட் கிளப்புக்கு தெண்டுல்கரின் பெயர்

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்டுடன் விடைபெறுகிறார். அவரது 200–வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 14–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதையொட்டி அவருக்கு பிரமாண்டமான பிரிவுபசாரம் நடத்தி கவுரவிக்க மும்பை கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

மும்பை புறநகரான மகாவீர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காந்திவிலி கிரிக்கெட் கிளப்புக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. அங்கு அடுத்த மாதம் 11–ந்தேதி தெண்டுல்கருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களும், அரசியல் பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் விழாவிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றிலும் தெண்டுல்கரின் 24 ஆண்டு கால கட்–அவுட் வைக்கப்படுகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகளில் அவரது படத்தை அச்சிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தனது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் பார்ப்பதற்காக தெண்டுல்கர் 500 டிக்கெட்டுகளை கேட்டுள்ளார். தெண்டுல்கரின் ஆட்டத்தை அவரது தாயார் ரஜ்னி இதுவரை மைதானத்திற்கு வந்து பார்த்ததில்லை.

ஆனால் மகனின் கடைசி போட்டியை அவர் வீல்சேர் உதவியுடன் நேரில் ரசிக்க இருக்கிறார். தாயார் சிரமமின்றி போட்டியை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து தெண்டுல்கர் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெஸ்ட் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அவர் கவுரவிக்கப்படுகிறார்.

You may also like ...

திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு!

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க

இன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்!

முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர

Also Viewed !

புதிய தொகுப்புகள்