2-வது டெஸ்ட்; வங்காளதேசம் அணி 228 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்தது.

பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்டகாங்கில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது.

இந்த நிலையில் நியூசிலாந்து-வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், அனாமுல் ஹக் ஆகியோர் களம் இறங்கினார்கள். அனாமுல் ஹக் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து மார்ஷல் அயூப், தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அடித்து ஆடினார்கள். மார்ஷல் அயூப் 62 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 41 ரன்னும், அடுத்து களம் கண்ட மொமினுல் ஹக் 59 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 47 ரன்னும் சேர்த்து ஆட்டம் இழந்தனர்.

நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் (153 பந்துகளில் 17 பவுண்டரியுடன்) 95 ரன்னில் வாக்னர் பந்து வீச்சில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த சில ஓவர்களில் ஷகிப் அல்-ஹசன் 20 ரன்னில் நடையை கட்டினார்.

தேனீர் இடைவேளையின் போது வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 54.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் முஷிபுர் ரம் 14 ரன்னுடன் களத்தில் இருந்தார். தேனீர் இடைவேளையின் போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.

You may also like ...

இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி!

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர

புதிய தொகுப்புகள்