வங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் சிட்டகாங்கில் நடந்த முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவானது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது.

கடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 501 ஓட்டங்களை குவித்ததன் மூலம் வங்காளதேசத்தின் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் சோஹக் காஜி சதம் அடித்ததுடன், ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 10 டெஸ்டில் விளையாடியுள்ள வங்காளதேச அணி அதில் 8-ல் தோல்வியும், 2-ல் சமநிலையும் கண்டுள்ளது.

முதல் முறையாக அந்த அணியை தோற்கடித்து வரலாறு படைக்கும் முனைப்புடன் வங்காளதேசம் தயாராக உள்ளது

இந்த ஆண்டில் நியூசிலாந்து அணி இன்னும் ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

இன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது!

இன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க

IPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி!

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்

புதிய தொகுப்புகள்