இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரை இலங்கை அணி மூன்றுக்கு ஒன்று என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை இன்றைய போட்டியின்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் டீ.எம்.டில்சான் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.