கிரிக்கெட்டில் அதிகளவு பணம் புரள்கின்றமையே வீரர்கள் தவறிழைப்பதற்கு காரணம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
அதிகளவு பணத்தை சம்பாதிக்கும் எதிர்பார்ப்பில் அவர்கள் தவறிழைக்க முற்படுவதாக கபில் தேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகளின் மகத்துவத்துக்கு களங்கம் ஏற்படுவதாக கபில் தேவ் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்டநிர்ணயங்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்தியாவின் சில வீரர்களிடம் பொலிஸார் கடும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவ்வாறான வீரர்களுக்கு எந்தவித தயவுமின்றி தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.