உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில், தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி ஒக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நடைப்பெற்றது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
பாகிஸ்தானின் தொடக்க வீரர் சர்ப்ராஸ் அகமது 49 ஓட்டங்களையும், அகமது செஷாத் 18 ஓட்டங்களையும், யூனிஸ்கான் 37 ஓட்டங்களையும் எடுத்த நிலையில், சோயிப் மசூத் 8 ஓட்டங்களிலும், உமர் அக்மல் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் 40.1 ஓவர்களில் 197 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 40.1வது ஓவரில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
அதன் பின்னர் மழை காரணமாக ஓவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டு போட்டி மீண்டும், தொடங்கப்பட்டது. எனவே, போட்டி தொடங்கிய பிறகு எஞ்சியிருந்த 7 ஓவர்களிலும் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது.
232 என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் ஆம்லா 38 ஓட்டங்களிலும் டுபிளெசிஸ் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடி வீரர்களான ரிலீ ரோச்சவ் 6 ஓட்டங்களிலும், டுமினி 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 32வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 200 ஓட்டங்களை பெற்றது. மேற்கொண்டு 32 ஓட்டங்களை மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், இருந்த போதிலும் இறுதியில் தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.