×

Error

There was a problem loading image online+table+creater.png

உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி

உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட நடப்பு சாம்பியனான இந்திய அணி தகுதி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் மொத்தம் 14 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் விளை யாடி வருகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 76 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலக கோப்பையில் அந்த அணியிடம் தோற்றதில்லை என்ற வெற்றி வரலாற்றை தக்கவைத்துக் கொண்டது.

அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க அணியுடன் மோதிய இந்தியா 130 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியையும் ஊதித் தள்ளிய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் பி பிரிவில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில், பெர்த் வாகா மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாசில் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 44.2 ஓவரில் 182 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 57 ரன் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 39.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து தொடர்ச்சியாக 4வது வெற்றியை வசப்படுத்தியது. கேப்டன் டோனி 45, அஷ்வின் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பி பிரிவில் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ள இந்திய அணி, கால் இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்தது. தனது 5வது லீக் ஆட்டத்தில் வரும் 10ம் தேதி அயர்லாந்து அணியுடன் மோதுகிறது.

You may also like ...

2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்!

2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு

World Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட

புதிய தொகுப்புகள்