இம்முறை உலகக்கிண்ணத்தில் நேற்று வரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் இலங்கை வீரர்களின் கை துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை ஓங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.
அதிகூடிய ஓட்டங்களை குவித்துள்ளவர்கள் வரிசையில் சங்கக்கார 268 ஓட்டங்களைப் பெற்று முதலாமிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து திரிமன்னே மற்றும் டில்சான் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளனர். இதில் திரிமன்னே மொத்தமாக 256 ஓட்டங்களையும், டில்சான் 229 ஓட்டங்களையும் பெற்றுக்ககொண்டுள்ளனர்.
அதிகூடிய தனிப்பட்ட ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் வரிசையில் டில்சான் 161 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் திரிமன்னே 139 ஓட்டங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
அதிகளவான நான்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர் வரிசையில் சங்கக்கார 30 நான்கு ஓட்டங்களை மொத்தமாகப் பெற்று முதலிடத்திலுள்ளார். அத்துடன் இவருக்கே அதிகூடிய சராசரியான 134.00 தன்னகத்தே கொண்டுள்ளார்.
இரண்டு சதங்களைப் விளாசியுள்ள சங்கக்கார சதமடித்துள்ளவர்கள் வரிசையில் முதலிடத்திலும் 2 அரைச்சதங்களை பெற்றுள்ள திரிமன்னே இரண்டாம் இடத்திலுமுள்ளனர்.
எனினும் இலங்கை அணியினரின் பந்துவீச்சானது கூறும்படியாக அமையவில்லை என்பதுடன் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு இன்னும் முன்னேறும் பட்சத்தில் இலங்கை அணியானது இம்முறை உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.