130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

உலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில்  தென் ஆபிரிக்காவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை இந்தியா  பதிவுசெய்துள்ளது.

இந்தியா நிர்ணயித்த 308 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்கா 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மெல்பேர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பாக ஷிகர் தவான் 137 ஓட்டங்களைப் பெற்றார்.

அஜின்கெயா ரஹானே 79 ஓட்டங்களையும், விராத் கொஹ்லி 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களைக் பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் மோர்னி மோர்கல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கான 308 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.

ஹாசிம் அம்லா 22 ஓட்டங்களுடனும், குவின்டன் டி கொக் 7 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஏபி டிவிலியர்ஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய டு பிலெசிஸ் தனது 13 ஆவது சர்வதேச ஒருநாள் அரைச்சதத்தைக் கடந்து 55 ஓட்டங்களைப் பெற்றார்.

ஒரு கட்டத்தில் 28 ஓட்டங்களுக்கு தென் ஆபிரிக்கா அணியின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

இறுதியில் 40 . 2 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆபிரிக்கா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

You may also like ...

வெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதர

IPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய

புதிய தொகுப்புகள்