தமக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகப்பூர்வக் கடிதத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பின் 42(4) பிரிவின் கீழ் தமக்குரிய நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.