உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலாந்தில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இதற்கான பயிற்சி ஆட்டங்கள் பெப்ரவரி 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
மொத்தம் 14 பயிற்சி ஆட்டங்கள் அடிலெய்ட், கிறிஸ்ட் சேர்ச், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடக்கின்றன.
ஒவ் வொரு அணியும் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடும். பெப்ரவரி 8ஆம் திகதி அடிலெய்டில் நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
பெப்ரவரி 10ஆம் திகதி அடிலெய்டில் நடக்கும் மற்றொரு போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.
இதில் இலங்கை அணி தனது முதலாவது பயிற்சி போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது மேலும் இப் போட்டி நியுஸிலாந்தின் ஹெக்லி ஓவலில் நடைபெறும்.
இலங்கை விளையாடும் இரண்டாவது பயிற்சிப் போட்டி பெப்ரவரி 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
லிங்கன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இலங்கை அணி சிம்பாப்வேயை எதிர்கொள்ளவுள்ளது.
இது அதிகாரபுர்வ போட்டியல்ல என்பதாலும் முழுதும் பயிற்சிக்கான வாய்ப்பளிக்கப்படும் போட்டிகள் என்பதாலும் அணிகள் 15 வீரர்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.