ஏழாவது உலகக் கிண்ண றக்பி தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து அணி தெரிவாகியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 20-6 விகிதத்தில் நியூஸிலாந்து அணி வெற்றிகொண்டது.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் வேல்ஸ் அணியை தோற்கடித்த பிரெஞ்சு அணியுடன் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி மோதவுள்ளது.
இத்தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெறவுள்ளது. 3 ஆம் இடத்திற்கான போட்டி 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது