ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா, பதக்கங்களில் சதம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆறாம் நாளான நேற்றைய நாள் நிறைவில் சீனா 150 பதக்கங்களை தாண்டி தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. மூன்றாமிடத்தில் இருந்த ஜப்பான் அணி இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாமிடத்தில் இருந்த போட்டிகளை நடாத்தும் தென் கொரியா மூன்றாமிடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

சீனா 79 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 42 வெள்ளிப் பதக்கங்களையும் 34 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று. மொத்தமாக 155 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

ஜப்பான்  28 தங்கம், 36 வெள்ளி, 32 வெண்கலம் அடங்கலாக 96 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 92 பதக்கங்களைப் பெற்று தென் கொரியா  மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. 28 தங்கம், 33 வெள்ளி, 31 வெண்கலம் அடங்கலாக  தென் கொரியா இந்தப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. கசகஸ்தான்   6 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக  30 பதக்கங்களுடன்  நான்கமிடத்தையும், வட கொரியா 6 தங்கப் பதக்கங்கள்  அடங்கலாக 22 பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் இடங்களை சைனிஸ் தாய்பேய், ஈரான், ஹொங் ஹோங், மலேசியா மொங்கோலியா  ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
 
இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கலாக 15 பதக்கங்களைப் பெற்று பதினைந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை 1 வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளது.

You may also like ...

லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச

மீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள

புதிய தொகுப்புகள்