கல்முனை றினொன் வெற்றி; கிரிக்கெட் சமர்...‏

காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த ஜொலி கிங்ஸ் கிண்ணம்-2013/14 போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம்  வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

காரைதீவு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் காலை நடைபெற்ற இப்போட்டியில் கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கல்முனை டொப் றேங் விளையாட்டுக்கழகம் மோதியது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற றினோன் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தனர்.

இவ்வணியின் சார்பில் அதிக ஓட்டங்களாக என். நிப்றாஸ் 35 ஓட்டங்கள், எஸ்.ஏ.சீ.றிஸ்வின் 30 ஓட்டங்கள், ஏ.எம்.பிறாஸ் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டொப் றேங் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 160 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வி கண்டனர். இவ்வணியின் சார்பாக அதிக ஓட்டங்களை நஜாஸ் 39 ஓட்டங்களையும், நிஜாம் 27 ஓட்டங்களையும், பைஸால் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

அடுத்த அரையிறுதிப்போட்டி அன்று மாலை இடம்பெற்றபோது சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் அணியினருக்கும் காரைதீவு ஜொலி கிங்ஸ் அணியினருக்கும் இடையில் நடைபெற்றது. இதில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் அணியினர் மோதவுள்ளதாக  காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்தனர்.

>எஸ்.அஷ்ரப்கான்

You may also like ...

திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு!

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க

இன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்!

முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர

புதிய தொகுப்புகள்