பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி; கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

இலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இணைந்து நடாத்திய 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2014 போட்டியின் அரையிறுதி போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அண்மையில் பலாங்கொட ஆனந்தா மைத்திரியா மகா வித்தியாலய அணியினை எதிர்த்து கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணியினர் மோதினர்.

பெல்வத்த சீனித் தொழிற்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணியை எதிர்த்து கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி அணி மோதியது.

50 ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய   பலாங்கொட ஆனந்தா மைத்திரியா மகா வித்தியாலய அணி 44 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி 39 ஓவர்களை மட்டுமே  சந்தித்து துடுப்பாட்ட வீரர்களின் அபார துடுப்பாட்டத்தினால் 07 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று இப்போட்டியில் 3 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றனர். இதன் மூலம் இறுதி ஆட்டத்திற்கு கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணியினர் தெரிவாகியுள்ளனர் என இப்பாடசாலை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், உடற்கல்வி ஆசிரியருமான ஏ.பைஸர் தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி விளையாட்டுத்துறையில் அண்மைக்காலமாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இதற்கு முழு ஒத்துழைப்பையூம் நெறிப்படுத்தலையூம் பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன் மற்றும் உதவி அதிபர் யூ.எல்.எம். ஹமீட் ஆகியோர் வழங்கி வருகின்றனர். அதற்காக பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பாக அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் இப்பாடசாலை விளையாட்டுத்துறையினருக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் இதர தேவைகளுக்குமாக தமது ஒத்துழைப்புக்களை வழங்கிவரும் கொழும்பு வை.எம்.எம்.ஏ.பேரவை பெஸன் பக் மற்றும் 1992 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர நண்பர் குழு (ஒ.எல்.ஸஹ்றியன்-92 வெச்) ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு இச்சுற்றுப்போட்டியின் சம்பியனாக எமது பாடசாலை தெரிவாவாவதற்கு மேலும் ஒத்துழைப்பை வழங்குமாறும் பாடசாலை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும்இ, உடற்கல்வி ஆசிரியருமான ஏ.பைஸர் மேலும் குறிப்பிட்டார்.

>எஸ்.அஷ்ரப்கான்

You may also like ...

இலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர

இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற

புதிய தொகுப்புகள்