பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ்மல் சர்ச்சையான முறையில் பந்து வீசுவதாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.
அவர் 15 டிகிரிக்கு அதிகமாக கையை வளைப்பதாக கூறியே குறித்த தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் சயித் அஜ்மல் பந்து வீசும் முறையை சரிபடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்து உள்ளது.
இதற்காக முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் உதவியையும் நாடியுள்ளது.
இதை அவர் ஏற்று கொண்டு உள்ளார் மேலும் சயித் அஜ் மலுக்கு உதவ தயாராக உள்ளதாகவும், இதற்காக லண்டனில் இருந்து பாகிஸ்தான் செல்வேன் என்றும் சக்லைன் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.