அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினுடைய 20-இருபது போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவித்துள்ளார்.
உலகக் கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தல்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை அதிகரித்து கொள்வதில் கவனம் செலுத்தும் பொருட்டு அத் தீர்மானத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் தாம் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தாம் சர்வதேச 20-இருபது போட்டிகளில் இருந்து ஒய்வு பெறப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள குழாமை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.
இதன்போது அவுஸ்திரேலிய அணியின் 20-இருபது போட்டிகளுக்கான புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.