×

Error

There was a problem loading image 60seconds_internet.jpg

There was a problem loading image senbaha-poo-270x170.jpg

பாக். படுதோல்வி - வெற்றியுடன் விடைபெற்றார் மஹெல

பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை வசப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்க, இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 14ம் திகதி கொழும்பில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க 92 ஓட்டங்களை விளாச, 320 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அணைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை.

இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சார்பில் மூன்றாவது நாளில் சர்பிராஸ் அகமது சதம் அடித்தார்.

8–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதமென்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 332 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது பாகிஸ்தான்.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

தொடர்ந்து 12 ஓட்டங்களால் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்க இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

போட்டியின் நான்காம் நாளான நேற்று 282 ஓட்டங்களை எடுத்த நிலையில் இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி பாகிஸ்தான் அணிக்கு 271 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து துடுப்புடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இலங்கை வீரர்களின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறியது.

நேற்றைய நான்காம் நாள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்த அந்த அணி, 127 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்தநிலையில் வெற்றி பெற வேண்டுமாயின் மூன்று விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 144 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இன்றைய ஐந்தாவதும் இறுதியுமான ஆட்டத்தைத் தொடர்ந்த பாகிஸ்தான், 165 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 09 விக்கெட்டுக்களை பறிகொடுத்துள்ளது.

இதேவேளை பாகிஸ்தானின் இறுதி துடுப்பாட்ட வீரர் யுனைட் கான் காயம் காரணமாக துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வரவில்லை. எனவே, இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-0 என இலங்கை வசமானது.

இந்தப் போட்டியில் சிறப்பான பந்து வீசிய ரங்கன ஹேரத் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை சாய்த்ததோடு இந்தப் போட்டியில் மொத்தமாக 14 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

மேலும் முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தனவுக்கு இது இறுதி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர், முதல் இன்னிங்சில் 4 ஒட்டங்களை மட்டுமே பெற்றார்.

இரண்டாவது இன்னிங்சில் 54 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அஹமட் ஷாகீட்டின் பந்து வீச்சில் ஷகீட் அஜ்மலிடம் பிடிகொடுத்து, ஆட்டமிழந்து வௌியேறினார்.

இதன்படி தனது இறுதி டெஸ்ட் தொடரில் பங்குபற்றிய அவரை மாபெரும் வெற்றியுடன் வழியனுப்பி வைத்துள்ளது இலங்கை அணி.

You may also like ...

நிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா

மின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.

நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய

புதிய தொகுப்புகள்