நேற்று இடம்பெற்ற போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் மஹேல ஜயவர்தன தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்றையை போட்டியில் தமது அணி வெற்றியடைந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது வீரர்கள் தொடர்பில் பெருமை அடைவதாகவும் மர்றும் தமக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இன்னும், தனது ட்விட்டரில் அவரது ஓய்வு தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தான் காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் விளையாடும் இறுதி போட்டி என்பதால் தமக்கு கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.