×

Error

There was a problem loading image piles-225x170.jpg

இந்திய வீரர்கள் 6 பேர் 0 ஓட்டம்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று(07) இங்கிலாந்து மன்செஸ்டரில் ஆரம்பித்து இருந்தது. முதல் நாளிலேயே 13 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.

இந்திய அணியின் மிக மோசமான ஆரம்பம் முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழக்க செய்தது. அணித்தலைவர் டோனி 71 ஓட்டங்களையும் அஷ்வின் 40 ஓட்டங்களையும், அஜின்கையா ரெஹானே 24 ஓட்டங்களையும் பெற்றனர். 6 வீரர்கள் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோட் 6 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டேர்சன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 
பதிலுக்கு துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் இயன் பெல் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக வருண் ஆரோன் 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
 
ஓட்டங்கள் குறைவாக பெறப்படும் போட்டியாகவே இந்தப் போட்டி கருதப்படுகின்றது.

You may also like ...

இலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம

கிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை!

உலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட

Also Viewed !

புதிய தொகுப்புகள்