ஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோ நகரில் நடைபெற்ற 20 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் இன்று அதிகாலையுடன் நிறைவுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
71 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 4 ,500 க்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கேற்ற பொதுநலவாய விளையாட்டு விழா கடந்த 11 நாட்களாக நடைபெற்றிருந்தது.
இந்த விளையாட்டு விழாவை 11 மில்லியன் மக்கள் கண்டு களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மிக முக்கியமாக 28 ஆண்டுகளுக்கு பின்னர் பதக்கப்பட்டியலில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்த நிலையில் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளமையே குறிப்பிடத்தக்கது.
58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப் பதக்கங்கள் என 174 மொத்தப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
49 தங்கம் 42 வெள்ளி 46 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 137 பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலயா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
32 தங்கப் பதக்கங்களுடன் கனடா மூன்றாம் இடத்தையும் 19 தங்கப் பதக்கங்களுடன் ஸ்கொட்லாந்து 4 ஆம் இடத்தையும் பெற்றன.
இந்தியா 15 தங்கப் பதக்கங்களை பெற்று ஐந்தாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
மேலும் நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, நைஜிரியா, கென்யா, ஜமேக்கா ஆகிய நாடுகள் அடுத்த அடுத்த இடங்களையும் பெற்றுக்கொணடது.
பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கமொன்றை மாத்திரம் பெற்றுக்கொண்ட இலங்கை 29 இடத்தைப் பெற்றுக்கொண்டது.