இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், சவுத்டாம்டன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 569 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களும் எடுத்தது.
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களுக்கும் எடுத்து, 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.