ஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸி தங்கப் பந்து (Golden Ball) விருதினை பெற்றது தனக்கு ஆச்சரியமளிப்பதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் செப் ப்ளெட்டர் தெரவித்துள்ளார்.
மேலும், போட்டிகளின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதுக்காக மெஸியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மாத்திரமன்றி, மெஸிக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டமை நியாயமற்றது என ஆர்ஜன்டினா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்னும், சில விளம்பரதாரர்களே இந்த விருதை மெஸிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
எவ்வாறாயினும், ஜேர்மன் மற்றும் ஆர்ஜன்டினாவுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதிப் போட்டியில் மெஸி கோல் எதனையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.