இலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை மீண்டும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது சச்சித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சில் பிழை இருப்பதாக நடுவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
மேலும் அவரின் பந்துவீச்சின் தன்மை குறித்து ஆராயும் முகமாக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையிலேயே சுழல் பந்துவீச்சாளரான சச்சித்ர சேனாநாயக்க தமது கையை உயர்த்தி பந்துவீசும் போது வரம்பை மீறிய வகையில் பந்துவீசுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்தே சச்சித்ர சேனாநாயக்க சர்வதேச பந்துவீச்சில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட்சபை தெரிவித்துள்ளது.