உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான பிரேஸில் 3-1 என்ற ரீதியல் அபாரமான வெற்றியை தனதாக்கி கொண்டது.
சாவ் போலோவில் நேற்று ஆரம்பமான முதல் போட்டியில் பிரேஸில் அணி வீரர் மார்செலோ போட்டியின் முதல் பாதியில் 11 வது நிமிடத்தில் ஒவ்ன் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார்.
அதன் பின் போட்டியின் 29 நிமிடத்தில் பிரேஸில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் ஒன்றை பெற்று கொடுத்தார்.
இதன் மூலம் போட்டியின் முதல்பாதி ஒன்றுக்கு ஒன்று என சமநிலை வகித்தது.
இதையடுத்து போட்டியின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் பெறுவதுற்கு மும்முரமாக முயன்றன.
மேலும், போட்டியின் 71 வது நிமிடத்தில் நெய்மர் பிரேஸில் சார்பாக இரண்டாவது கோலை பதிவு செய்து அணியை பலப்படுத்தினார்.
இந்நிலையில் போட்டியின் இறுதிநிமிடத்தில் பிரேஸில் அணி வீரர் ஓஸ்கர் கோல் ஒன்றை பெற்று பிரேஸில் அணியினது வெற்றியை உறுதிப்படுத்தினார்
இதன் மூலம் பரேஸில் அணி குரோஷிய அணியை மூன்றுக்கு 1 என்ற ரீதியில் வெற்றிக் கொண்டது
மேலும் , பிரேஸில் அணி ஏ குழுவில் 3 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றது
பிரேஸில் ஐந்து தடவைகள் கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 நாடுகள் பங்கேற்கும் உலகக்கிண்ண காலப்பந்தாட்டத் தொடரில் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன.