E-buy வெற்றிக் கிண்ணம் 2014 இறுதி போட்டி நிகழ்வு

E-buy வெற்றிக் கிண்ணம் 2014 ம் ஆண்டுக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்  போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு 2014.06.06 ம் திகதி வெள்ளிக் கிழமை சாய்ந்தமருது கடற்கரை மர்ஹூம் பௌஸி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வின் இறுதிப் போட்டியில் "சாய்ந்தமருது ஜோன் பிளேயர் விளையாட்டுக்கழகத்தினரை எதிர்த்து சம்மாந்துறை தொழிநுட்ப கல்லுாரி அணி மோதியது. இதில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சம்மாந்துறை தொழிநுட்ப கல்லுாரி அணி வெற்றியை தனதாக்கி  E-buy வெற்றிக் கிண்ணம் 2014 ம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவானது.
 
இந்த மாபெரும் இறுதிப் போட்டிக்கு  பிரதம   அதிதியாக வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் தேசமானிய சாமஸ்ரீ அல் ஹாஜ் ஏ.எம். றிஸ்வி அவர்களும், விசேட அதிதிகளாக E-buy முகாமையாளர் எம்.எம். ஸியாஸ் மதனி, ஏ.எச்.அல்- ஜவாஹிர், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பி.எம். ரஜாய், கிராம உத்தியோகத்தர்   எல்.நாஸர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். நபார் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
வெற்றி பெற்ற அணிக்கு 5000 ரூபா பணப் பரிசிலும், வெற்றிக் கேடயமும், வெற்றி பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
 
இரண்டாம் இடத்தினைப் பெற்ற அணிக்கு 3000 ரூபா பணப்பரிசிலும் , வெற்றிக் கேடயமும் ,  பதக்கமும் , சான்றிதழும் வழங்கப்பட்டன.
 
மற்றும் தொடர் நாயகன் விருது , இறுதிப் போட்டி நாயகன் விருது , டொப்-50 விருது , மற்றும் ஏராளமான விருதுகளும் வழங்கப்பட்டன.
 
ஏற்பாட்டு குழுவிற்கான விருதினை தேசமானிய சாமஸ்ரீ , அல் ஹாஜ் ஏ.எம்.றிஸ்வி அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
 
மக்கள் செய்தி இணையத்தள நாளிதழ் மற்றும் சாய்ந்தமருது காரியப்பர் இளைஞர் ஒன்றியம் இணைந்து விசேட நினைவுச் சின்னத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொறியியலாளர் ஏ.எம். றிஸ்வி அவர்களுக்கு வழங்கி , பொன்னாடையும் போர்த்தி கெளரவித்தனர்.

(எஸ்.அஷ்ரப்கான்)

You may also like ...

மே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்?

12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற

முதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல

புதிய தொகுப்புகள்