மும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெறும் பொட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில் முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.
சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 51 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சருடன், 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லோகேஷ் ராகுல் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை பந்து வீச்சில் ஜாகிர்கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
மும்பை அணி தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.