உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமினிக் தீமை வீழ்த்தி டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
டொப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா), மெத்வதேவ் (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.
தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை டொமினிக் தீம் 6-4 என வென்றார்.
ஆனாலும் இரண்டாவது செட்டில் மெத்வதேவ் அதிரடியாக ஆடினார். டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை மெத்வதேவ் 7-6 என தன்வசப்படுத்தினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், டேனில் மெத்வதேவ் 4-6, 7-6(2), 6-4 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 3 வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியைப் பெற மெத்வதேவுக்கு 2 மணி 43 நிமிடங்கள் தேவைப்பட்டது.
சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற மெத்வதேவ் உலகின் முதல் 3 நிலை வீரர்களை இந்த தொடரில் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>AD
(Date: 23.11.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.