ஐபிஎல் 13-வது சீசன் கடந்த 10-ந் திகதி முடிவடைந்தது. இந்தத் தொடரில் மிகவும் உற்று கவனிக்கப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜனும் ஒருவர். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர்பெற்ற நடராஜன், இந்த சீசனில் டெத் ஓவர்களில் அசத்தினார். துல்லியமான யார்க்கர் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
எலிமினேட்டர் சுற்றில் டி வில்லியர்ஸை துல்லியமான யார்க்கர்களால் வீழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனால் டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டி20 அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் நேற்று பயிற்சியை ஆரம்பித்தனர். இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார்.
>AD
(Date: 16.11.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.