அதிக தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமால் ஆட்டமிழந்த தலைவர்

இந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் அதிக தடவைகள் ஆட்டமிழந்த தலைவராக  Kolkata Knight Riders அணியின் தலைவர் கெளதம் காம்பீர் பதிவாகியுள்ளார்.

ஐ.பி.எல் வரலாற்றில் காம்பீர் இதுவரை ஏழு தடவைகள் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும், நடைபெற்று வரும் ஏழாவது ஐ.பி.எல் தொடரில் மாத்திரம் இரண்டு தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமால் அவர் ஆட்டமிழந்துள்ளார்.

அணியின் ஆரம்ப துடுப்பாற்ற வீரராகவும், தலைவராகவும் செயற்படும் காம்பீர் இவ்வாறு பொறுப்பற்று நடந்துகொள்வது அணிக்கு பலவீனமாக அமையுமென கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like ...

ஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்!

உலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை

இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ

புதிய தொகுப்புகள்