இலங்கை இருபதுக்கு-20 கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மாலிங்க ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இருபதுக்கு-20, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் அணியின் உப தலைவராக லஹிரு திரிமான்ன பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் தலைவர் பதவியை அஞ்சலோ மெத்தியூஸ் தொடர்ந்தும் வகிப்பார் என இலங்கை கிரிக்கட் தெரிவிக்கின்றது.