மெக்ஸ்வெல் மீண்டும் அதிரடி

நேற்று இடம்பெற்ற ஐ.பி.ல் தொடரின் லீக் ஆட்டமொன்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 72 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 194 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.  7 ஓவர்கள் நிறைவில் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது, லோகேஷ் ராகுல் மாத்திரமே குறிப்பிடத்தக்க 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

செவாக் 30, புஜாரா 35, என ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.  நேற்றைய தினமும் தனது அதிரடியை தொடர்ந்த கிளன் மெக்ஸ்வெல் 21 பந்துகளில் 50 ஓட்டங்களைக் கடந்தார்

43 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பெற்ற மெக்ஸ்வெல், 5 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார்.

இந்நிலையில் 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து ஹைதராபாத் அணி 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

You may also like ...

மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா

தனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்!

பாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே

புதிய தொகுப்புகள்