கல்கிஸ்ஸயில் தனது முக்கிய கிளையைத் திறந்துள்ள செலிங்கோ லைஃப்

செலிங்கோ லைஃப் கல்கிஸ்ஸயில் மிகவும் பிரபலமான இடத்தில் அதன் முக்கிய கிளையை அண்மையில் திறந்து வைத்துள்ளது. சுறுசுறுப்புமிக்க இந்தப் புறநகர் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் இந்தக் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 615 காலி வீதி கல்கிஸ்ஸ என்ற முகவரியில் அமைந்துள்ள பாரம்பரிய இல்லத்தை கொள்வனவு செய்தே செலிங்கோ அதன் கிளை அலுவலகமாக மாற்றியுள்ளது. இங்கு 40 ஊழியர்கள் பணிபுரிவர். தெஹிவலை, கல்கிஸ்ஸ, இரத்மலானை மற்றும் அத்திடிய ஆகிய பகுதிகளின் வாடிக்கையாளர்களுக்கு இங்கிருந்து அவர்கள் பணியாற்றுவர்.

கல்கிஸ்ஸயின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இக் கிளை 5.25 பேச்சர்ஸ் காணியில் அமைந்துள்ள கட்டிடத்தை புனரமைப்புச் செய்து உருவாககப்பட்டுள்ளது. இங்கு போதிய வாகன தரிப்பிட வசதிகளும் உள்ளன. வெளியிலுள்ள பரபரப்புக்கள் நீங்கி மிக அமைதியான ஒரு சூழலில் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை இங்கு நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

புதிய கிளையின் சம்பிரதாயபூர்வ ஆரம்ப வைபவத்தில் உரை நிகழ்த்திய செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் ஆயுள் காப்புறுதியின் அவசியத்தை வலியுறுத்தியதோடு ஸ்திரமான ஒரு கம்பனியிடமிருந்து அதை பெற்றுக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். 2013ம் ஆண்டின் முடிவில் இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் நிறுவனம் என்ற வகையில் செலிங்கோ லைஃப் பத்தாண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.

தற்போது அது ஐம்பத்தைந்து பில்லியன் ரூபாவை ஆயுள் நிதியமாக கொண்டுள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட அதன் மீளாய்வு செய்யப்பட்ட மருத்துவக் கொள்கைகள் உள்ளடங்கலாக பல்வேறு விதமான தெரிவுகளையும் அது கொண்டுள்ளது.

காணிகளில் முதலீடு செய்யும் அதன் மூலோபாயத்தின் ஒரு அங்கமாக அதன் சொந்தக் காணிகளில் பிரதான இடங்களில் செலிங்கோ லைஃப் கிளைகளை நிறுவி வருகின்றது. கம்பனி அதன் கிளைகளை எற்கனவே அநுராதபுரம், யாழ்ப்பாணம், களுத்துறை, குருநாகல், கம்பஹா, மாத்தறை, காலி, திஸ்ஸமஹாராம, நீர்கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் தனது சொந்தக் காணியில் நிறுவியுள்ளது. அதேபோல் அண்மையில் பண்டாரவலையிலும் தனது சொந்தக் காணியில் அண்மையில் நிர்மாணப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

சுயாதீனமான முறைகளின் கீழ் இலங்கையின் மிகவும் பெறுமதி மிக்க வர்த்தக முத்திரைகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் 2004 முதல் நாட்டின் நீண்டகால காப்புறுதி பிரிவில் தலைமை தாங்கும் நிறுவனமாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள ஆயுள் காப்புறுதிக் கம்பனிகளுள் ஆகக் கூடதலான கிளை வலையமைப்பையும் அது கொண்டுள்ளது. அதன் சமூக நலன் சேவைகள் மற்றும் வர்த்தக முத்திரை சமநிலையைக் கட்டியெழுப்பல் என்பனவற்றுக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளையும் அது வென்றுள்ளது.

You may also like ...

சாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்!

அடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்

FaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள்!

ஆப்பிள் நிறுனம் தனது மொபைல் சாதனங்கள் ஊடாக பயனர்கள

புதிய தொகுப்புகள்