தனது 140வது கணனி ஆய்வுகூடத்தை அன்பளிப்புச் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

தேசிய மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் கொமர்ஷல் வங்கி அதன் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் (CSR) ஊடாக அமுல் செய்து வரும் திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தின் நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலை அண்மையில் கணனி ஆய்வுகூடம் ஒன்றைப் பெற்றுக் கொண்டது.

இது கொமர்ஷல் வங்கி அன்பளிப்புச் செய்துள்ள 140வது கணனி ஆய்வுகூடமாகும். இந்தப் புதிய ஆய்வுகூடத்தை கொமர்ஷல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி டயஸ் நிக்கவரெட்டிய மஹமித்தாவ கனிஷ்ட பாடசாலையில் திறந்து வைத்தார். இது கூமார் 200 மாணவ மாணவியரைக் கொண்ட ஒரு கலவன் பாடசாலையாகும்.

கொமர்ஷல் வங்கியால் வழங்கப்படும் எல்லா கணனி ஆய்வு கூடங்களுக்கும் புத்தம் புதிய கணனிகள், அதற்கான தளபாடங்கள், அங்கீகாரம் அளிக்கப்பட்ட மென் பொருள்கள், அச்சுப் பிரதி எடுக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கப்படுகின்றன. இந்த நிலையங்களைப் பராமரிப்பதற்கான உதவிகளையும் வங்கி வழங்குகின்றது. மேலும் இவற்றால் பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது அவற்றை தரமுயர்த்த தேவையான வசதிகளையும் உதவிகளையும் வங்கி வழங்குகின்றது.

வங்கி அதன் தகவல் தொழில்நுட்ப அறிவு மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக அதனால் வழங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் மூலம் இணைய வழி கற்கை செயற்திட்டத்தையும் அமுல் செய்யத் தொடங்கியுள்ளது.

கொமர்ஷல் வங்கி அதன் வரிக்குப் பிந்திய இலாபத்தின் ஒரு பகுதியை அதன் CSR திட்டத்துக்கு வழங்கி வருகின்றது. 2004ம் ஆண்டில் 25 மில்லியன் ரூபா முதலீட்டுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ´சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்காக அதிலும் குறிப்பாக வலுவூட்டல் மற்றும் வளமாக்கல் தேவைப்படுகின்ற மக்களுக்காக கணிசமான அளவு நீடித்து நிலைக்கக் கூடிய சமூக பங்கிலாபத்தை திரட்டுதல்´ என்பதே பொதுவாக வங்கியின் CSR திட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள வரைவிலக்கணமாகும்.

கொமர்ஷல் வங்கியின் CSR திட்டத்தின் கீழ் வரும் ஏனைய செயற்பாடுகளாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசிலும்இ மடிக் கணினிகளும் வழங்கல், கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில கல்வி மேம்பாட்டுத் திட்டம், நாடு முழுவதும் சுகாதாரத் திட்டங்களுக்கு உதவியளித்தல், யுத்த வீரர்களுக்கு ஆதரவளித்தல், கலாசார மரபுரிமை பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதி உதவியளித்தல் என்பன அடங்குகின்றன.

You may also like ...

சாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்!

அடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்

பேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது!

பேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப

புதிய தொகுப்புகள்