பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் தலைவரும் விக்கட் காப்பாளருமான மொயின் கான் தெரிவாகியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளராகவும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தேசிய அணியின் நிரந்தர தேர்வாளர் தலைவர் பதவிக்கான வெற்றிடம் கடந்த பத்து மாதங்களாக நிலவி வந்தது அறிந்ததே. அந்த வெற்றிடத்திர்க்காகவே மொயின் கான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு பாகிஸ்தானின் இடைக்கால தெரிவுக்குழு தமது பணியை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளது.
இதேவேளை பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சஹீர் அப்பாஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதியின் தலைமை ஆலோசகராக செயற்படவுள்ளார்.