லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - மல்லோர்கா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா 5-2 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்தார்.
இது அவருக்கு லா லிகா லீக்கில் 35-வது ஹாட்ரிக் கோல் ஆகும். இதன் மூலம் அதிகமுறை ஹாட்ரிக் கோல் அடித்திருந்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார். ரொனால்டோ 34 முறை அடித்துள்ளார். கடந்த சீசனில் இருந்து அவர் லா லிகாவில் இருந்து விலகி இத்தாலி யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த வாரம் பலோன் டி´ஆர் விருதை 6-வது முறையாக கைப்பற்றி ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>AD
(Date: 09.12.2019)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.